Homeஅரசியல்ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்:பிஎஸ்எம் வேட்பாளராக பவானி போட்டியிடுகிறார்! 

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்:பிஎஸ்எம் வேட்பாளராக பவானி போட்டியிடுகிறார்! 

பெட்டாலிங் ஜெயா, ஏப்.9-இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பார்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) தனது துணை தலைமைச் செயலாளரான பவானி கே.எஸ்ஸை களம் இறக்கியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் இரு முக்கிய கூட்டணி கட்சிகளான தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனலை எதிர்கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் பவானி என்று பிஎஸ்எம் குறிப்பிட்டது.

சமூகவாதியும் மனித உரிமை குழு வழக்கறிஞருமான பவானி கே.எஸ். பேராக் மாநில பிஎஸ்எம் தலைவரும் ஆவார்.

இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. காரணம் முதன் முறையாக பிஎஸ்எம், மூடா மற்றும் பார்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) ஆகியவை ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை ஆதரிக்கிறது.

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் வேளையில் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தேதி நிர்ணயித்தது.

பேராக் மாநில ஆயர்கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் பிப்ரவரி 22ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதி காலியானது.

 

 

spot_img

latest articles

explore more