Homeசமூகம்பேராக் மாநில சட்டமன்ற கூட்டம்:சுல்தான் நஸ்ரின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

பேராக் மாநில சட்டமன்ற கூட்டம்:சுல்தான் நஸ்ரின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

ஈப்போ, ஏப்.15-இன்று நடைபெற்ற பேராக் மாநில 15ஆவது சட்டமன்றத்தின் மூன்றாமாண்டின் முதலாவது கூட்டத் தொடரை மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஜூடின் ஷா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

ஈப்போ, பேராக் டாருல் ரிட்சுவான் கட்டடத்தில் நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் மாநில ராணி துவாங்கு ஜாரா சாலிமும் கலந்து கொண்டார்.

சுல்தான் தம்பதியரை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது மற்றும் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமது ஜாஹிர் அப்துல் காலிட் இருவரும் வரவேற்றனர்.

சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில மனித வளம், சுகாதாரம் மற்றும் இந்தியர் விவகார துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான அ. சிவநேசன் உட்பட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

 

spot_img

latest articles

explore more