Homeசமூகம்சமூகம்இபிஎஃப் வழி காப்புறுதி கட்டணம் கட்டாயமல்ல! டத்தோஸ்ரீ சுல்கிப்லி 

இபிஎஃப் வழி காப்புறுதி கட்டணம் கட்டாயமல்ல! டத்தோஸ்ரீ சுல்கிப்லி 

புத்ரா ஜெயா, ஜூன் 20-

ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இபிஎஃப்) இரண்டாவது கணக்கில் இருந்து சுகாதார காப்புறுதி சந்தா செலுத்தலாம் என்ற அரசாங்கத்தின் பரிந்துரை கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமது கூறினார்.

மருத்துவ காப்புறுதி இல்லாத 32 விழுக்காடு பொது மக்கள் சிகிச்சைக்கு முழு கட்டணத்தையும் செலுத்தும் சூழலில் உள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் ஊழியர் சேம நிதியின் இரண்டாவது கணக்கில் உள்ள பணத்தை இவர்கள் சுகாதார காப்புறுதிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனினும், இது கட்டாயமாக்கப்படவில்லை என்றார் அமைச்சர்.

பல நாடுகளில் அமலில் இருக்கும் இத்திட்டம் மலேசியாவிலும் நடைமுறைக்கு வந்தால் 16 மில்லியன் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் சொந்த பணத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று அவர் விவரித்தார்.

இதன் அடிப்படையிலேயே ஊழியர் சேம நிதியின் இரண்டாவது கணக்கை மக்கள் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சொன்னார்.

 

spot_img

latest articles

explore more