Homeசமூகம்சமூகம்ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேரை திவாலற்றவர்களாக அறிவிக்க அரசு திட்டம்! 

ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேரை திவாலற்றவர்களாக அறிவிக்க அரசு திட்டம்! 

ஷா ஆலம், ஜூன் 23-

இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டில்  2 லட்சம் பேரைத் திவாலற்றவர்களாக அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பிரதமர் துறையின் கழக சீரமைப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார். 

அரசாங்கம் இதுவரை சுமார் 186000 பேரை திவாலானவர்கள் என்ற பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது என்று மலேசிய திவால்துறையை அஸாலினா மேற்கோள் காட்டினார்.

இவ்வெண்ணிக்கையை  2 லட்சமாகக் குறைக்க அரசாங்கம்  எண்ணம் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் வழி பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை  அரசாங்கம்  வழங்கவிருப்பதாக இங்குள்ள யுஐடிஎம்மில்  நடைபெற்ற நிதி அறிவுத்திறன் திட்ட தொடக்க விழாவிற்குப்  பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களிடம் பேசினார். 

 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இரண்டாவது வாய்ப்பின்  கீழ் 40 வயதிற்கும் குறைந்த  மற்றும் 200,000 வெள்ளிக்குக் குறைவான கடன் வைத்திருப்பவர்களைத் திவாலற்றவர்களாக அறிவிக்கலாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக் கூறியிருந்தார்.

2021 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு 2025 மே மாதம் வரை நாட்டில் மொத்தம் 25,578 பேர் திவாலாகி இருப்பதாக அஸாலினா  கூறினார். 

spot_img

latest articles

explore more