Homeசமூகம்நாட்டின் வரி விதிப்பு முறை செல்வந்தர்களை விட வசதி குறைந்தோரை வதைக்கிறது! 

நாட்டின் வரி விதிப்பு முறை செல்வந்தர்களை விட வசதி குறைந்தோரை வதைக்கிறது! 

கோலாலம்பூர், ஜூன் 25-

நாட்டின் விலைவாசி அதிகரிப்பு,குறைவான சம்பளம் மற்றும் நாட்டின் கடன் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே செல்வந்தர்களுக்கும் வறியோருக்குமான வரி விதிப்பு நியாயமாக இல்லையென்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ குற்றம் சாட்டினார்.

தற்போதைய விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி), மிக அதிகமான கலால் வரி போன்றவை வசதி குறைந்த மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், செல்வச் செழிப்பில் இருக்கும் பணக்காரர்களுக்கு நிறுவன வரி மற்றும் ஊக்குவிப்பு நிதி போன்றவை வழங்கப்படுவதோடு பல்வேறு வரி விலக்குகளும் அளிக்கப்படுகின்றன.

மேலும், மற்றவர்களைப் போலவே பொருள்களுக்கான உதவி நிதியையும் அவர்கள் பெறுவதை சார்லஸ் சுட்டிக் காட்டினார்.

எனவே, வரி விதிப்பானது பணக்காரர்களின் செல்வ வளத்திற்கு ஏற்ற வகையிலும் வசதி குறைந்தவர்களுக்கு பரிவான வகையிலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சார்லஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more