கோலாலம்பூர், ஜூன் 25-

2024ஆம் ஆண்டு SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும், இனம், பின்னணி பாராமல், மெட்ரிகுலேஷனில் இடம் பெறுவர் என மலேசிய கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, கல்வியமைச்சு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதில், 10A பெற்றவர்களும், A- மதிப்பெண்கள் உள்ள மாணவர்கள் அடங்குவர். அந்தக் கொள்கை, கடந்த ஆண்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தவாறு, 2024 SPM-மில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர்க்கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பூமிபுத்ரா மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை மாற்றமின்றி தொடரும் என்றும் இந்த முடிவு அதற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

“மடானி அரசாங்கம், நாட்டின் எதிர்கால சொத்துக்களான மாணவர்களின் நன்மைக்காக, அனைவருக்கும் கல்வி அணுகலை மேம்படுத்துவதை தொடர்ந்து உறுதி செய்யும்,” என்றும் கல்வியமைச்சு கூறியுள்ளது.