கோலாலம்பூர், ஜூன் 26-
ஜூலை 1ஆம் தேதி முதல்’ My50′ அட்டையை டச் & கோ இ-வாலெட் வாயிலாக புதுப்பிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையானது பொது போக்குவரத்து அமைப்புகளை இலக்கவியல் மயமாக்கும் அரசாங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றார் அந்தோணி லோக்.
தவிர, இப்போது ரெப்பிட் கேஎல் முகப்பிடங்களில் மட்டுமே ‘My50’ அட்டையைப் புதுப்பிக்க முடியும். இதற்கு ஒரு நபருக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் பிடிக்கும்.
ஒரே நேரத்தில் 15 பேர் ‘My50’ அட்டை யைப் புதுப்பிக்க வரிசையில் நின்றால் காத்திருக்கும் நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.
இந்த புதுப்பித்தல் முறையில் ஏற்படும் தாமதம் குறித்து அமைச்சுக்குத் தொடர்ந்து புகார்கள் வருவதாக அவர் சொன்னார்.


