Homeசமூகம்சமூகம்ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு பணி: இஸ்மாயில் சுல்தான் சாலை ஜூலை 16வரை மூடப்படும்!

ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு பணி: இஸ்மாயில் சுல்தான் சாலை ஜூலை 16வரை மூடப்படும்!

ஜொகூர் பாரு, ஜூலை 4-சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையிலான ஆர்டிஎஸ் ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளால் ஸ்டூலாங் நோக்கிச் செல்லும் ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலை ஜூலை 16-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் முழுமையாக மூடப்படும் என்று ஆர்டிஎஸ் செயல்பாட்டு நிறுவனம் கூறியது.

இதன் பொருட்டு ஜூலை 16ஆம் தேதி வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலை மூடப்படும் என்று அந்நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டது.

இதன் கட்டுமானப் பணிகள் ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் ஏழு மணி நேரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழியைப் பயன்படுத்தும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாற்றுவழிகள் குறித்து‘ RTS Operations Pte Ltd ‘(RTSO) எனும் இந்நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

 

spot_img

latest articles

explore more