பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15
நாட்டின் ஆறு கடல்சார் சட்டங்கள் மீது போக்குவரத்து அமைச்சு மறுஆய்வு செய்து வருவதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இந்தச் சட்டங்கள் தற்போதைய சூழலுக்கு இனியும் பொருந்தாது என்பதால் இந்த மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சொன்னார்.
1952 வாணிப கப்பல் சட்டம் (எம்எஸ்ஒ) , சரவாக் எம்எஸ்ஒ , சபா எம்எஸ்ஒ , 1990துறைமுக தனியார்மய சட்டம், 1955 பினாங்கு துறைமுக ஆணைய சட்டம், 1963 துறைமுக அதிகார சட்டம் ஆகியவையே மறுஆய்வுக்கு உட்பட்டிருக்கும் அந்த ஆறு சட்டங்கள்.
நாட்டின் கடல்சார் தொழில் போட்டித்தன்மையுடனும், விவேக தன்மையுடனும் இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்த மறுஆய்வு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று 2025 மலேசிய கடல்சார் வாரத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார்.


