Homeகுற்றவியல்சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கெவின் மரணம்! 

சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கெவின் மரணம்! 

பெந்தோங், ஜூலை 31-

திருட்டுக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு பெந்தோங் போலீஸ் சிறைச்சாலையில் இருந்த கைதியான ஜி. ஜெஸ்டஸ் கெவின் 2020 ஏப்ரல் 2ஆம் தேதி மரணமடைந்ததற்கு சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதே காரணம் என மரண விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கெவினுக்கு தலையில் கடுமையான நோய் இருப்பதை அறிந்தும் போலீஸார் அவருக்குத் தக்க சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில், அவரோடு சிறையில் இருந்த சக கைதிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரைக் கடுமையாகத் தாக்கிக் காயம் விளைவித்து மரணத்திற்குக் காரணமாக இருந்துள்ளதாக மரண விசாரணையை நடத்திய குவாந்தான் மாஜிஸ்திரேட் சுஸாலினா ஷாபி அறிவித்தார்.

தங்களது பாதுகாப்பில் விடப்பட்ட கெவினை பாதுகாக்கத் தவறிய போலீஸார், கெவினுக்கு தக்க சிகிச்சை அளிக்கத் தவறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கெவின் உடற்கூறு பரிசோதனையில் அவரின் இருதயம் மற்றும் நுரையீரல் போன்றவை சேதமடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக சுஸாலினா சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலையில் இருந்து சக கைதிகளில் ஒருவரோ அல்லது ஒருவருக்கு மேற்பட்டவரோ காரணமாக இருந்திருக்கும் ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 

spot_img

latest articles

explore more