Homeகுற்றவியல்சக மாணவனைத் தாக்கினர்: நால்வர் கைது

சக மாணவனைத் தாக்கினர்: நால்வர் கைது

காஜாங், ஆக. 1-

காஜாங் பேரங்காடி ஒன்றில் 13 வயதான சக மாணவனைத் தாக்கிக் காயப்படுத்தியதாக நான்கு மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில், காஜாங் பேரங்காடி ஒன்றில் நிகழ்ந்ததாகவும், சம்பந்தப்பட்ட மாணவனை இரு மாணவர்கள் தாக்கிய போது, வேறு இரண்டு மாணவர்கள் அச்சம்பவத்தை வீடியோ படமெடுத்து அதனை ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அது பற்றி போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மோதலில் சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்கள் இரவில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தைக் கையில் எடுத்து மாணவர்கள் மோதலில் ஈடுபட வேண்டாமென்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more