கோலாலம்பூர், ஆக. 1-
1948ஆம் ஆண்டு வாக்கில் அப்போதைய கம்யூனிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போரிட நாடு முழுமையிலும் புது கிராமங்கள் உருவாக்கப்பட்டன.
அந்த கிராமங்களில் பெரும்பாலும் சீனர்களே அதிகமாக வசிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோருக்கு வீட்டுக்கான நிலப்பட்டா இன்னமும் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக கெராக்கான் தலைவர் டாக்டர் டோமினிக் லாவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது மலேசிய திட்டத்தில் கிராமங்களை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால் புது கிராமங்களில் வசிப்போருக்குத் தனித்தனியான நிலப்பட்டாக்களை வழங்கினால், அந்தச் சொத்துகளின் விலை அதிகரிக்கப்பட்டு அங்குள்ளோருக்குப் பெரும் பயனாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, மடானி அரசு தமது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று டோமினிக் லாவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-பொன் முனியாண்டி


