ஜாசின்,அக்.19-
மலேசிய இந்து சங்கம் ஜாசின் வட்டாரப் பேரவை மலாக்கா பத்து 16, ஜாலான் பெம்பானில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில், நவராத்திரி சரஸ்வதி பூஜையை (எஸ்.பி.எம் மாணவர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை 2026) மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டத்தோ வி.பி. சண்முகன், வி.ஆர். குமார் ஆறுமுகம் (மலேசிய இந்து சங்க மாநிலத் துணைத் தலைவர்), சந்திரசேகர் (கோத்தா மலாக்கா மஇகா தொகுதி துணைத் தலைவர்), ஆசிரியர் கே. குணா (மலாக்கா மாநில மஇகா செயற்குழு உறுப்பினர்), திருமதி வி.ஆர். கவிதா கண்ணன் (கல்வித் துறை உதவி இயக்குநர்), மலேசிய இந்து சங்க மாநில இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ஷர்வின், மாநில மகளிர் பிரிவு துணைத் தலைவி தொண்டர்மணி ஏ. பார்வதி மற்றும் திருமதி சித்ரா (ஜாசின் மாவட்டக் கல்வி அலுவலகம் – PPD Jasin) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் இடம் பெற்றது. ‘நிருத்த சமுத்ரா’ கலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் அவர்களின் குரு சந்தியா சதீஷ் ஆகியோருக்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சி பக்தி, அமைதி மற்றும் தெய்வீக ஆசிகளால் நிறைந்த ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. மேலும் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகக் குழுவினருக்கும்,
ஜசின் இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டு சங்கத்திற்கும் நன்றினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
டத்தோ வி.பி. சண்முகன் மற்றும் இந்நிகழ்ச்சி வெற்றி பெற நிதியுதவி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றி தெரிவித்தனர்.


