Homeசமூகம்புக்கிட் கியாரா நீண்ட இல்ல மக்களுக்குத் தீபாவளி உதவி; புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில்...

புக்கிட் கியாரா நீண்ட இல்ல மக்களுக்குத் தீபாவளி உதவி; புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்

கோலாலம்பூர், நவம்பர் 6:

புக்கிட் கியாரா நீண்ட இல்லத்தில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கு தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு நிதியுதவி வழங்கப்பட்டதாகப் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தின் சார்பில் தமது அரசியல் செயலாளர் யாப் யீ வோன் அப்பகுதிக்குச் சென்று, இந்தியக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்ததுடன், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான சிறு உதவிகளையும் வழங்கியதாக ஹன்னா குறிப்பிட்டார்.

இதனிடையே அப்பகுதியில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம், தற்போது மேம்பாட்டாளரால் தொழில்நுட்ப நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நடைமுறையில் இருப்பதாகவும், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹன்னா இயோ தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more