Homeமலேசியாஅந்நிய தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுக்கும் போக்கை கொள்ள மாட்டோம்!

அந்நிய தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுக்கும் போக்கை கொள்ள மாட்டோம்!

கோலாலம்பூர், நவ.13-
குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீஸ் ஈடுபடும் போது அவர்களுக்கு எதிராக சவால் விடும் அந்நிய தொழிலாளர்களிடம் போலீஸ் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் லஸிம் தெரிவித்தார். போலீசை அவர்களின் கடமையை செய்ய விடாமல் தடுப்பவர்களை போலீஸ் படை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஜாலான் இம்பியில் ஒரு குத்தகைத் தொழிலாளரின் வீட்டின் முன்புறம் சூதாட்ட நடவடிக்கைத் தொடர்பில் போலீஸ் சோதனையை மேற்கொண்டிருந்த போது சுமார் 30 சீன நாட்டுத் தொழிலாளர்கள் கண்காணிப்பு போலீசாரைத் தாக்கினர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட போலீசார் சில முறை துப்பாக்கி சூட்டை நடத்தினார். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசுகையில் டத்தோ மஸ்லான் மேற்கண்டவாறு சொன்னார்.

இந்த சம்பவத்தில் போலீஸ் இதுவரையில் 2 பெண்கள் உட்பட 8 சீன நாட்டுத் தொழிலாளர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு அணிவகுப்பைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டத்தோ மஸ்லான் லஸிம் கூறினார்.

கோலாலம்பூரில் அந்நியத் தொழிலாளர்கள் சூதாட்டம், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவர்களின் நடவடிக்கைகளை போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வரும் என்று மஸ்லான் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more