Homeமலேசியாமத்திய அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கவில்லை! லிம் குவான் எங்

மத்திய அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கவில்லை! லிம் குவான் எங்

ஜோர்ஜ்டவுன், நவ. 13-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்பட வெள்ள பிரச்னையை களைவதற்கான எந்த உதவியையும் மத்திய அரசாங்கம் வழங்கவில்லை என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

வெள்ள நிலைமையை பார்வையிட கடந்த 7ஆம் தேதி பினாங்கிற்கு வருகை புரிந்த பிரதமர் நஜீப், இதுவரையில் உதவிகள் குறித்த எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், லெம்பாங்கான் சுங்கை பினாங்கில் மூன்றாம் கட்ட வெள்ளத் தடுப்பு திட்டம் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நேரடி உதவிகள் குறித்து ஒன்றும் அறிவிக்கவில்லை. அவர் வெகுவிரைவில் அறிவிப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதுவரையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாநில அரசாங்கத்திற்கு உதவிகள் கிடைக்கவில்லை. நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என இன்று மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லிம் குவான் எங் சொன்னார்.

spot_img

latest articles

explore more