Homeமலேசியாஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் சொத்து விபரங்களை அறிவிப்பா?

ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் சொத்து விபரங்களை அறிவிப்பா?

பெட்டாலிங் ஜெயா, நவ. 15-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர்களில் 30 பேர், தற்போது பதவியிலிருக்கும் சிலர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய சொத்துக்களின் விபரங்களை அறிவிக்கவுள்ளனர்.

பிகேஆர் துணைத் தலைவர் முகமட் ரபிஸி ரம்லியால் உருவாக்கப்பட்ட இன்வோக் மலேசியா என்ற அமைப்பினால் உதவப்பட்டவர்களே சொத்து விபரங்களை அறிவிக்கவுள்ளனர். மக்களுக்கு சேவையை நேர்மையாக சேவையாற்றும் வகையில் அவர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள். அதோடு, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறினால் ஒவ்வொருவரும் 2 கோடி வெள்ளியை மக்கள் நம்பிக்கை நிதியில் செலுத்து வேண்டும்.

இந்த தகவலை அனைத்து மலேசியர்களிடமும் பகிருங்கள். நாட்டை மறுசீரமைக்கக்கூடிய வரலாற்றுக்குரிய இந்த உருமாற்ற அலையில் குடும்பத்தினரை அழைத்து வாருங்கள் என இன்று வெளியிட்ட அறிக்கையில் ரபிசி ரம்லி கூறினார். ஞாயிற்றுக்கிழமை சம்மிட் யுஎஸ்ஜேயில் நடைபெறவிருக்கும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அனைத்து மலேசியர்களுக்கும் ரபிஸி அழைப்பு விடுத்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் 53 வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக இன்னொரு வெ. 50 லட்சத்தை பொதுமக்களிடமிருந்து திரட்ட முடியும் என்று இன்வோக் எதிர்பார்க்கின்றது.

spot_img

latest articles

explore more