Homeமலேசியாதாயார் கொலை: மகள் மீது குற்றச்சாட்டு

தாயார் கொலை: மகள் மீது குற்றச்சாட்டு

ஜெலுபு, ஜூலை 20-

கடந்த மாதம் பாஹாவ் எனும் பகுதியில் 70 வயதுடைய தன்னுடைய தாயாரைக் கொலை செய்ததாக 52 வயது மகள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி காலை 11.30க்கும் மாலை மாலை 5.20 மணிக்கும் இடையே எண் 2, பெக்கான் ஜெலாய், பஹாவ், ஜெம்போலில் எம்.பிச்சை எனும் தன்னுடைய தாயாரைக் கொலை செய்ததாக எம். சின்னம்மா என்பவ்ர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் முகமது ரெட்ஸா அசார் அலி முன்னிலையில் மொழி பெயர்ப்பாளர் குற்றப் பத்திரிகையை வாசித்த பிறகு சின்னம்மாவிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. சின்னம்மா என்பவர் புக்கிட் பிலா தோட்டம், ரொம்பின், ஜெம்போலைச் சேர்ந்தவர். இவர் குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கி உள்ளார். இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

அரசு தரப்பில் டிபிபி வான் அகமது ஹிஜ்ரா வான் அப்துல்லா வழக்கை நடத்துகிறார். சின்னம்மா தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கு ஆகஸ்ட் 22இல் விசாரணைக்கு வரும்.

spot_img

latest articles

explore more