Homeமலேசியாமேம்பாலத்தின் கீழ் நிர்வாண கோலத்தில் பெண்ணின் சடலம்!

மேம்பாலத்தின் கீழ் நிர்வாண கோலத்தில் பெண்ணின் சடலம்!

ஷா ஆலம், டிச. 18-
இங்குள்ள ஜாலான் ராஜா நோங்கில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் நிர்வாண கோலத்தில் உயிரற்ற நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை மணி 7.30 அளவில் அவ்வழியே வந்த ஆடவர் ஒருவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் சடலத்தைக் கண்டு போலீசுக்கு தகவல் வழங்கியதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார்.

37 வயதுடைய அந்த பெண்ணின் வலது கண் பகுதியிலும் நெற்றியிலும் வீக்கம் இருந்தது. அவரது உடலும் நிர்வாண கோலத்தில் இருந்தது. சம்பந்தப்பட்ட பெண் கொலை செய்யப்படுவதற்கு முன் கற்பழிக்கப்பட்டாரா என்பதை போலீஸ் இன்னும் உறுதிய செய்யவில்லை.

அப்பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கியெறியப்பட்டிருக்கக்கூடும். காரணம், அவரது உடல் மீட்கப்பட்ட இடத்தில் வேறு எந்த தடயங்களும் காணப்படவில்லை. அவரது கைரேகையை வைத்து மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும் தனித்துவாழும் தாய்மார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அவர் பண்டமாரானைச் சேர்ந்தவர்.

போலீஸ் இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக கிள்ளானிலுள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீஸ் இச்சம்பவத்தைக் குற்றவியல் சட்டவிதியான செக்க்ஷன் 302இன் கீழ் விசாரணையை மேற்கொண்டு வருவதாக சம்சுல் அமார் ரம்லி கூறினார்.

spot_img

latest articles

explore more