Homeமலேசியா14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை; அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்ட ரபிசி!

14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை; அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்ட ரபிசி!

கோலாலம்பூர், மார்ச் 14-
கடந்த 2013ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்கப்பட்டதிலிருந்து அரசாங்கத்தை விமர்சித்து வந்ததற்காக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார்.

மாமன்னரின் உரை மீதான விவாதத்தின் போது பேசிய அவர், நேஷ்னல் பீட்லோட் கார்ப்பரேஷன் நிறுவனம் மீதான வழக்கில் தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைத் தாம் இழந்து விட்டதால் மன்னிப்பு கேட்பதாக பி.கே.ஆரின் உதவித் தலைவருமான அவர் கூறினார்.

வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடாததால் இதுதான் என்னுடைய கடைசி உரையாகும். இங்கு எனக்கு பேச வாய்ப்பளித்த நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளேன். தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ பூங் மொக்தார் ராடின், லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷம்சுல் அனுவார் நசாரா, தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹலிமா முஹம்மட் சாடிக், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஒமார் ஆகியோர் மீது நான் வெறுப்புணர்வைக் கொண்டதில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியில் நல்ல முறையில் இருந்துள்ளோம்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கும் போது மக்கள் எனக்கு வழங்கிய கடமையை மட்டுமே நான் செய்தேன். நமக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. எதிர்கட்சியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் மக்கள் வழங்கிய நம்பிக்கைக்கைக்கு ஏற்ப அரசாங்கம் அதன் கடமையை செய்வதை உறுதி செய்ய வேண்டியது எங்களின் கடமையாகும். மக்களுக்கு நெருக்கமான விவகாரங்களை விட்டு நான் ஓடி ஒளிய முடியாது. நஜீப் கொண்டிருக்கும் வேலை பளு மற்றும் அவர் மீதான தாக்குதல் மீது நான் பரிதாபப்படுகிறேன். ஆனாலும், அவர் மீதான என்னுடைய விமர்சனங்கள் குறையாது என ரபிசி ரம்லி கூறினார்.

spot_img

latest articles

explore more