புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எடை தூக்குதலில் மலேசியாவிற்கு 3ஆவது பதக்கம்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எடை தூக்குதலில் மலேசியாவிற்கு 3ஆவது பதக்கம்

கோல் கோஸ்ட், ஏப், 8-

ஆண்களுக்கான எடை தூக்கும் போட்டியில் 85 கிலோவிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் மலேசியாவின் முகமட் ஃபஸ்ருல் அஸ்ரி வெண்கலப்பதக்கத்தை வென்றார். தேசிய அணியில் தமது சாதனையை அவரே இப்போடியில் முறியடித்துள்ளார்.

எடை தூக்கும் பிரிவில் மலேசியா அனைத்து நாடுகளில் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் 328 கிலோ (மலேசிய சாதனை 327) கிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தை அவர் வென்றுள்ளார். இதோடு எடை தூக்கும் பிரிவில் மலேசியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. முகமட் அஸ்ரோய் வாபி, முகமட் அஸ்னில் பிடின் ஆகியோர் 56, 62 கிலோ கிராம் பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றது மிகப் பெரிய மகிழ்ச்சி தருகிறது. இந்த பதக்கத்திற்கு நாங்கள் இலக்கு வைக்கவில்லை. 8ஆம் நிலை வீரராக இருந்தாலும், விடா முயற்சியால் ஃப்ஸ்ரூல் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் என் எடை தூக்கும் அணியின் பயிற்றுநர் அமிரூல் ஹமிஸான் தெரிவித்தார். வெள்ளிப்பதக்கத்திற்கு தாம் இலக்கு நிர்ணயித்ததாகவும் விரலில் ஏற்பட்ட காயத்தினால் அது சாத்தியமாகவில்லை என ஃப்ஸ்ரூல் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன