ஜோர்ஜ்டவுன், ஏப். 9-

வரும் 14ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ளத் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தயாராக வேண்டும் என்பதால் அவர் மற்றும் வர்த்தகர் பாங் லீ கூனின் லஞ்ச ஊழல் வழக்கை உயர் நீதிமன்றம் மே 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று லிம்மின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோவின் விண்ணப்பத்தை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ மஸ்ரி முகமட் டாவுட் எதிர்த்தார்.

முன்னதாக அதிகாரப்பூர்வ அலுவல் காரணத்தினால் லிம் நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனதற்காக நீதிமன்றத்தில் கோபிந்த் சிங் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முன்னதாக நாடாளுமன்றத்தைப் பிரதமர் கலைத்து விட்ட காரணத்தினால் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொள்ள எங்களுக்குக் கால அவகாசம் தேவை.

பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது எங்களுக்குத் தெரியாதக் காரணத்தினால் இந்த வழக்கு விவாதத்தை மே மாதத் தொடக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று தாம் பரிந்துரைப்பதாக கோபிந்த் சிங் மேலும் கூறினார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மே 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.