Homeஇந்தியா/ ஈழம்ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது

ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது

சென்னை:

தமிழக நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சாந்தோமில் உள்ள வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரிந்த இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரு அணிகளும் விரைவில் இணையும்.

தலைமை கழகத்தில் இன்று மாலை நடக்கும் ஆலோசனை கூட்டம் வழக்கமானது தான். கட்சியை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இணைவது பற்றி செய்திகள் வெளியாகி உள்ளது. இதுபற்றி கருத்து சொல்ல இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more