Homeமலேசியாகெட்கோ விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்போம்!

கெட்கோ விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்போம்!

கோலாலம்பூர், ஆக. 3-
கெட்கோ விவகாரத்திற்கும் ம.இ.காவிற்கும் தொடர்புகள் ஏதும் இல்லை என்றாலும் அவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என மேலவைத் தலைவரும் ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

கெட்கோ விவகாரம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டத்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கெட்கோ குடியிருப்பாளர்களுக்காக போராடிவரும் அரசு சார்பற்ற இயக்கத்தின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எல்.மாணிக்கம், தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ வி.மோகன், ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்.சோதிநாதன் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கெட்கோ நிலத்திற்காக நீதிமன்றத்தில் போராடிவரும் குடியிருப்பாளர்களுக்கு எந்த வகையில் உதவுவது குறித்து கலந்துரையாடப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இவ்விவகாரத்திற்கும் ம.இ.காவிற்கும் துளியும் சம்பந்தம் இல்லாத போதிலும் சில தரப்பினர் கட்சியின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், இதை பற்றி நாங்கள் கவலைப் பட போவதில்லை. மாறாக, இறுதி தீர்வு கிடைக்கும் வரையில் கெட்கோ குடியிருப்பாளர் நடவடிக்கை குழுவுடன் போராடுவோம் என டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்தார்.

spot_img

latest articles

explore more