வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அம்னோ நிர்வாகத்தில் தலையிடுகிறேனா? நஜீப்
முதன்மைச் செய்திகள்

அம்னோ நிர்வாகத்தில் தலையிடுகிறேனா? நஜீப்

கோலாலம்பூர், ஆக. 15
அம்னோவின் தேசிய தலைவர் பதவியிலிருந்து விலகியதிலிருந்து அதன் நிர்வாகத்தில் தாம் தலையிட்டதில்லை என டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

பிரதமராக இருந்த போது தாம் அறிமுகம் செய்த கொள்கைகளைப் பாதுகாக்கவே இதுவரை அறிக்கைகளில் வெளியிட்டு வந்துள்ளதாகவும் தலைவர் பதவியிலிருந்து விலகியதிலிருந்து அக்கட்சியின் நிர்வாகத்தில் தாம் தலையிட்டதில்லை என நஜீப் கூறினார்.

அம்னோ விவகாரங்களில் நஜீப் ஒதுங்கியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

நடப்பு தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹாமிடி சுதந்திரமாக முடிவு செய்யலாம். அம்னோ தேசிய தலைவர் எனும் முறையில் அவரை தாம் ஆதரிப்பதாகவும், அதே சமயம் தம்முடைய கொள்கைகளை பாதுகாக்கும் உரிமை தமக்கு உள்ளது என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் நஜீப் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அம்னோவின் நிர்வாகம் எதையும் செய்வதற்கு சுதந்திரம் உள்ளது. புதிய தலைமைத்துவத்தை தாம் ஆதரிப்பதாகவும் சுங்கை கண்டீஸ் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய சென்றது பற்றி கருத்துரைத்த அவர் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ லோக்மான் அடாம் அழைத்ததால் தாம் அங்கு சென்றதாக அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன