வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > விவாதம் நடத்த தயார் நான் தயார்! – ரம்லி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

விவாதம் நடத்த தயார் நான் தயார்! – ரம்லி

பெட்டாலிங் ஜெயா, ஆக.16-

பிகேஆர் கட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சித் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அஸ்மின் அலியுடன் விவாதம் நடத்தத் தாம் தயாராய் இருப்பதாக அதன் உதவித் தலைவர், ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

பண்டான் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ரபிஸி, அஸ்மினை எதிர்த்துத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

அப்படி விவாதம் மட்டும் நடத்தவில்லை என்றால் அது அவமானமாகத்தான் இருக்கும், காரணம் இதற்கு முன் அம்னோ கூட விவாதம் நடத்தியிருக்கிறது. விவாதத்தை உண்மையில் நாம் விவகாரங்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக நடத்த வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் ரபிஸி குறிப்பிட்டார்.

முன்னதாக அம்னோ கட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அதன் தலைவருக்கான வேட்பாளர், குவா முசாங் எம்.பி, டான்ஸ்ரீ தெங்கு ரசாலி ஹம்சா, பாகான் டத்தோ எம்.பி, டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் ரெம்பாவ் தொகுதி எம்.பி, கைரி ஜமாலுடினுக்குமிடையே விவாதம் நடத்தப்பட்டது.

இதில் பிகேஆர் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றி தமக்கு அத்தேர்தலில் ஆதரவாளர்களாய் இருக்க 8 பேரை ரபிஸி பட்டியலிட்டுள்ளார். அவர்களில் நூருல் இசா அன்வார், டத்தோ ஜொஹாரி அப்துல், வில்லியம் லியோங், எஸ்.கேசவன், புஸியா சாலே, ரொட்ஸியா இஸ்மாயில், அக்மால் நாசிர், ரேய்மண்ட் அஹுவார் ஆகியோர் அடங்குவர்.

தமது ஆதரவைக் கட்சித் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் வழங்குவதாக ரபிஸி கூறினார்.
அப்படி கட்சித் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் நியமனம் பெறுவதைத் தாம் நிராகரிக்கப் போவதாக ரபிஸி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன