அனைத்துலக கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மோசஸ் !

0
5

லண்டன், ஆக.16-

அனைத்துலக கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நைஜீரியா ஆட்டக்காரர் விக்டர் மோசஸ் அறிவித்துள்ளார். 27 வயதுடைய மோசஸ், 37 முறை நைஜீரிய தேசிய கால்பந்து அணியை பிரதிநிதித்து விளையாடியுள்ளார். 2012 ஆம் ஆண்டுத் தொடங்கி நைஜீரியா அணியில் விளையாடி வரும் விக்டர் மோசஸ் 12 கோல்களைப் போட்டுள்ளார்.

கிறிஸ்டல் பேலஸ் கிளப்பில் விளையாடியபோது விக்டர் மோசஸ், 21 வயதுக்கு உட்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.  நைஜீரியா அணியில் விளையாடியபோது நிறைய சுகமான அனுபவங்கள் கிடைத்ததாக விக்டர் மோசஸ் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா கால்பந்து அணியில் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டில் நைஜீரியாவுடன் ஆப்ரிக்க கிண்ணத்தை வென்ற விக்டர் மோசஸ், 2014, 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.