முகப்பு > முதன்மைச் செய்திகள் > பதவி ஓய்வுப் பெறுகிறார் அலி ஹம்சா ??
முதன்மைச் செய்திகள்

பதவி ஓய்வுப் பெறுகிறார் அலி ஹம்சா ??

கோலாலம்பூர், ஆக.17-

அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ அலி ஹம்சா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த ஆண்டின் இறுதி வரை அலி ஹம்சாவை அரசாங்க தலைமைச் செயலாளர் பதவியில் நிலைத்திருக்கச் செய்ய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் எண்ணம் கொண்டிருந்தாலும்,  வரும் 29 ஆம் தேதி அவர் பதவி ஓய்வுப் பெறுவார் என கூறப்படுகிறது.

அலி ஹம்சாவின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என பிரதமர்துறை அலுவலகத்தில் உள்ள வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம், அலி ஹம்சாவின் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. அலி ஹம்சா ஓய்வு பெறும் பட்சத்தில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்னர், பொதுச் சேவைத்துறை தலைமை இயக்குன்னர் அல்லது அமைச்சுகளின் மூத்த தலைமைச் செயலாளர்களில் இருந்து அரசாங்க தலைமைச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அரசாங்க மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியின்படி நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் சிறப்பு செயற்குழுவின் வழி புதிய அரசாங்க தலைமைச் செயலாளர் தேர்தெடுக்கப்பட விருக்கிறார்.

அலி ஹம்சாவுக்குப் பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் அந்த பதவிக்கு தேர்தெடுக்கப்படலாம் என கடந்த ஜூன் முதல் தேதி செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன