வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாருன் இணைந்து பணியாற்றக்கூடிய துணைத் தலைவர்தான் தேவை!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருன் இணைந்து பணியாற்றக்கூடிய துணைத் தலைவர்தான் தேவை!

கோத்தாகினபாலு, ஆக.20-

பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராவதை துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆதரிக்கிறாரா இல்லையா என்று அவரின் விசுவாசம் தொடர்பில் உதவித் தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான சுங்கை சிப்புட் தொகுதி எம்.பி, எஸ்.கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆவதற்கு துணைத் தலைவர் அஸ்மின் அலி, வெளிப்படையான ஆதரவை இதுவரையில் தெரிவிக்கவில்லை. இது பல்வேறான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதனால் அன்வாருடன் ஒளிவு மறைவின்றி பணியாற்றும் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதில் விசுவாசமற்ற அதுவும் அன்வார் பிரதமராவதைத் தடுக்கக்கூடிய கட்சியின் உண்மையான திட்டத்தைத் தோல்வியுறச் செய்யக்கூடிய தலைவர்களை நாங்கள் விரும்புவதில்லை.

இதன் காரணமாகத்தான் ரபிஷியை துணைத் தலைவராக நாங்கள் ஆதரிக்கிறோம். இதனால் இத்திட்டம் மட்டுமின்றி அன்வார் பிரதமராவதையும் செயல்படுத்த முடியும் என்று கேசவன் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன