ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அன்வார் மீதான அடிப்படையற்ற விஷயம் தேவையற்றது-டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா
முதன்மைச் செய்திகள்

அன்வார் மீதான அடிப்படையற்ற விஷயம் தேவையற்றது-டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா

கோலாலம்பூர், ஆக. 22
நாட்டு மக்களின் தேவையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தமது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதை தடுக்க சதி நடப்பதாக கூறப்படும் அடிப்படையற்ற விஷயத்தில் கவனம் செலுத்த தேவையில்லை என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

தமது தலைமையிலான பிகேஆர் கட்சியும் நம்பிக்கை கூட்டணியும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் மிகச் சிறந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் நம்பிக்கை கூட்டணியில் உள்ள மற்ற அமைச்சர்களுடன் பிகேஆர் கட்சி ஒத்துழைத்து வருகின்றது. எனவே, இதில் சதித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 8ஆவது பிரதமராக தாம் பதவியேற்பதை தடுக்கும் சதி திட்டம் எதுவும் பிகேஆர் கட்சியில் இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு முன் வெளியிட்ட அறிக்கை குறித்து வான் அஜிசா இவ்வாறு கருத்துரைத்தார்.

நாம் இப்போது சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றோம். எனவே, சதித் திட்டம் பற்றி கேள்விகள் எதையும் எழுப்ப வேண்டாம். அதுபோன்ற குற்றச்சாட்டுகளையும் நம்ப வேண்டாம் என தாமான் செம்பாக்கா அம்பாங்கில் உள்ள பள்ளி வாசலில் சுமார் 500 பேருடன் ஹஜ் பெருநாள் தொழுகையில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அன்வாரை வீழ்த்துவதற்கு பிகேஆர் தலைவர்கள் சிலருடன் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மறைமுகமாக திட்டம் தீட்டியுள்ளார் எனக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

நாங்கள் டாக்டர் மகாதீருடன் சேர்ந்து கூட்டாக அரசாங்கம் அமைத்திருக்கின்றோம். 61 அண்டுகளுக்குப் பிறகு நாம் அரசாங்கத்தை மாற்றியது போல சிறந்த அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையிலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன