புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > நஜீப்பின் ஆட்சியில் பல கொள்ளையர்கள் -துன் மகாதீர் அம்பலம்
முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் ஆட்சியில் பல கொள்ளையர்கள் -துன் மகாதீர் அம்பலம்

அலோர் ஸ்டார், ஆக. 26
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆட்சி காலத்தில் பல கொள்ளையர்கள் உருவாகியுள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் இருந்த பல அரசியல் தலைவர்கள் தங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாட்டின் சில சட்ட திட்டங்களைப் பின்பற்றாமல் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை இல்லாத அளவிற்கு நஜீப்பின் ஆட்சியில், ஊழலும் திருட்டும் அதிகமிருந்ததாக மகாதீர் குற்றம் சாட்டினார்.

நஜீப் பிரதமரானதும், அவரின் கீழ் பணியாற்றிய பலரும் அவரைப் போன்றே திருடர்களாக மாறினர். அரசு அதிகாரிகள் தங்களது சம்பளத்தை அடுத்து, மாதந்தோறும் வெ. 200,000 வரை லஞ்சம் பெற்று ஊழலில் திளைத்திருந்தனர் என்றும் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பிய அவர், அவையெல்லாம் திருடப்பட்ட பணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

சில அரசு அதிகாரிகளுக்குத் திட்டங்களை மேற்கொள்ள 30 கோடி வெள்ளி கொடுக்கப்பட்டதில், அதிலிருந்து அவர்கள் 10 கோடி வெள்ளியைக் களவாடியதாக மகாதீர் குற்றம் சாட்டினார்.

இம்மாதிரியான குற்றம் செய்தவர்கள் கூடிய விரைவில் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன