கிள்ளான், ஆக. 27-

சுசு ரவி என்பவரின் 70 ஆண்டுகால மாட்டுத் தொழுவத்தை இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் உடைத்தெறிந்தனர்.

ஒரு காலத்தில் ஹைலண்ட்ஸ் தோட்டமாக இருந்த இடம். கடந்த 20 ஆண்டுகளாக பாரிசான் அரசாங்கத்துடன் இழுபறியாக இருந்து வந்த மாட்டுப் பண்ணை புதிய அரசாங்கம் வந்ததும், அதிரடி நடவடிக்கையில் இறங்கி, காளியம்மன் கோவில் மற்றும் கருணைக்காட்டும் நாகம்மாள் கோவில் இரண்டையும் உடைத்து விட்டு மாட்டு தொழுவத்தையும் உடைத்தெறிந்தார்கள்.

அந்த வளாகத்தில் இருந்த மற்றொரு நாகம்மாள் புத்து கோவில் தப்பியது. பதட்ட நிலை அதிகமானதும் தகவல் அறிந்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் மாட்டுப்பண்ணைக்கு விரைந்து வந்ததும் அங்கிருந்த நிலத் துறை அதிகாரியிடமும் தென் கிள்ளான் ஏ.எஸ்.பி கமருல் பைசால் அவர்களிடம் முழு விவரத்தையும் கேட்டறிந்தார்.

சிலாங்கூர் நில அரசாங்கத்தின் கட்டளையின்படி அவர்கள் கொடுத்த அனுமதியுடன் இந்த மாட்டுக் கொட்டகையை உடைக்கின்றோம் என நகராண்மைக்கழக நில அதிகாரி ஒருவர் சொன்னார். அனைத்து விதமான விவரங்களைக் கேட்ட பிறகு உடனடியாக கோவில் உடைப்பதையும், மாட்டுக்கொட்டகையை உடைப்பதையும் நிறுத்தும் படி கேட்டுக்கொண்டார். மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுக்கொண்டார்.

அவர்களும் சம்மதம் தெரிவித்து உடைப்பதை நிறுத்திக் கொண்டனர். இந்த மாட்டுக்கொட்டகை உடைப்பதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் நான் செந்தோசா சட்டமன்றத்தின் உறுப்பினராக வந்து இன்னும் என் மைகூட காயவில்லை. மாட்டுக் கொட்டை விவரம் எனக்கு எள்ளளவும் இதுவரைக்கும் தெரியாது. ஏனென்றால் நான் சட்டமன்றத்திற்கு வரும் முன்பே பேசி எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றார்

ஜி.குணராஜ் மாட்டுக்கொட்டகைக்கு வருவதற்கு முன்பாக துரித வேகத்தில் 21 கரவை மாடுகளையும், முறட்டுக் காளை ஒன்றையும் லோரியில் ஏற்றி அனுப்பிவைத்தார்கள் அங்கிருந்த அதிகாரிகள். மாட்டுக் கொட்டகையை உடைக்க வந்தவர் ஏன் மாடுகளை ஏற்றி சென்றார்கள். நல்லவேளை ஆடுகள் தப்பித்தது என பலரும் பேசிக் கொண்டார்கள். பொதுமக்கள் கேள்வி கேட்டார்கள் பதில் எதுவும் அந்த அதிகாரிகள் கொடுக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார்கள்.

மாட்டின் உரிமையாளர் சுசு ரவி, தங்கராஜ், மற்றும் சரவணன் ஆகியோர் போலீஸ்காரர்களுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அந்த மூவரையும் கைது செய்து தென் கிள்ளான் காவல் நிலையத்திற்கு கொண்டு போகும்படி ஏ.எஸ்.பி. கமருள் பைசால் கட்டளையிட்டார். ஆனால் அந்த 21 மாடுகளும் எங்கு கொண்டுபோனார்கள் என்பதற்கு சரியான பதில் அந்த அதிகாரிகள் கொடுக்கவில்லை.

ஜி.குணராஜ் அவர்களைத் தவிர இந்திய அரசியல் தலைவர்கள் யாரும் வரவில்லை. ஆனால் மஇகாவின் சார்பில் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் கஜேந்திரன் போலீஸ்காரர்களுடன் பேச்சு நடத்தினார்.
அவர்களுக்கு இரண்டு நாளாக இந்த மாட்டுக் கொட்டகை உடைபடுவதாக எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தும், அதிகமான சீனர்கள் வாழும் இடம் என்பதால், நம் இந்திய சமுகத் தலைவர்கள் கிள்ளான் புக்கிட் திங்கி பக்கம் வரவில்லை என பலர் பேசிக்கொண்டனர்.

.