அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > செப்டம்பர் முதல் தேதியில் இருந்து சீனியின் விலை குறைக்கப்படும் !
முதன்மைச் செய்திகள்

செப்டம்பர் முதல் தேதியில் இருந்து சீனியின் விலை குறைக்கப்படும் !

கோலாலம்பூர், ஆக.27 

வரும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சீனியின் விலை ஒரு கிலோ கிராமுக்கு 10 சென் குறைக்கப்படுவதாக உள்நாட்டு வாணிக, பயனீட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம்,  பயனீட்டாளர்கள்  சீனியை கிலோ ஒன்றுக்கு 2 ரிங்கிட் 85 சென்னுக்கும்,  தூள் சீனியை கிலோ ஒன்றுக்கு 2 ரிங்கிட் 95 சென்னுக்கு வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் டத்தோ சைபூடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் சுத்தகரிக்கப்படாத சீனியின் விலை குறைந்து வருவதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சீனி விநியோகம் போதுமான அளவில் இருப்பதையும் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்கப்படுவதையும் உறுதி செய்ய, 1961-ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டம், 2011-ஆம் ஆண்டு விலை கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் எதிர் பங்கீட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் சீனியின் விநியோகமும் விலையும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

தற்போது மொத்தமாக உள்ள வெள்ளைச் சீனியின் விலை கிலோ இரண்டு ரிங்கிட் 95 சென்னுக்கும் தூள் வெள்ளை சீனி கிலோ மூன்று ரிங்கிட் ஐந்து சென்னுக்கும் விற்கப்படுகிறது. தற்போது அதன் விலை குறைக்கப்பட்டிருப்பது மக்களின் சுமையைக் குறைக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இதன்வழி உணவு மற்றும் பானங்களின் விலையும் குறையும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன