வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாரை தாக்கியவர் அமைதிப் பேச்சு நடத்துவாரா? நூருல் இஸ்ஸா காட்டம்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாரை தாக்கியவர் அமைதிப் பேச்சு நடத்துவாரா? நூருல் இஸ்ஸா காட்டம்

கோலாலம்பூர், ஆக. 27-

முன்னாள் போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஹிம் நூரை தென் தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தையை வழிநடத்துபவராக நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

டுவிட்டரில் தமது கருத்தைப் பதிவிட்ட நூருல், அப்பாவி மனிதர் ஒருவரை மிருகத்தனமாகத் தாக்கியவர் என்று ரஹிமை வர்ணித்துள்ளார்.

கண்கள் கட்டப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட அப்பாவி மனிதரை மிருகத்தனமாகத் தாக்கி மருத்துவ உதவி எதுவும் கொடுக்காமல் பல நாள்களுக்கு அப்படியே இருக்கட்டும் என்று விட்டுச் சென்ற ஒருவர் அமைதிப் பேச்சை வழிநடத்துபவராக நியமிக்கப்பட்டிருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

மேற்கண்ட சம்பவம் நடந்த பின்னர், அடிபட்டவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது தமக்குத் தெரியாது என்று ரஹிம் பொய்யுரைத்தார். இக் கேலிக்குரிய நியமனத்தைச் செய்தவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்றார் நூருல் இஸ்ஸா.

நூருல் இஸ்ஸாவின் தந்தை அன்வார் இப்ராகிம் 1998-இல் துணைப் பிரதமராக இருந்தபோது கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, கண்களில் வீக்கம் ஏற்படும் அளவுக்கு அவரை அடித்த சம்பவத்தைதான் இஸ்ஸா குறிப்பிடுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன