வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! – ரபிஸி ரம்லி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! – ரபிஸி ரம்லி

ஈப்போ, செப்.2-

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பதவியேற்பதை உறுதி செய்வதற்காகவே தாம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய கட்சியின் உதவித் தலைவர், ரபிஸி ரம்லி சொந்த நலனுக்காக இல்லை என திட்டவட்டமாகக் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து ஒருசிலர் அதிருப்தி கொண்டிருப்பதோடு என்னுடைய நடவடிக்கையையும் சிறுமைப்படுத்தி விடுகின்றனர்.

அன்வார் மிகவும் கடுமையானவர், பேராசைக் கொண்டவர், காலம் கடந்து விட்டதால் இப்போது அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றெல்லாம் கூறுகின்றனர். இது எப்படி இருப்பினும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அப்படி கட்சித் தயாராகவில்லை என்றால் அன்வார் நாட்டின் 8ஆவதுப் பிரதமராகுவதை ஒருசிலர் விரும்பாமல்தான் இருப்பர் என்று கட்சியின் 20 ஆண்டு சீர்திருத்த விவாதத்தில் உரையாற்றிய போது ரபிஸி குறிப்பிட்டார்.

இதனிடையே, நான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது அன்வார் கடந்த 2015இல் சிறைக்குச் சென்றதிலிருந்து ஏற்பட்டப் பிளவுகளை முறியடிப்பதற்கே ஆகும் என்று ரபிஸி குறிப்பிட்டார்.

கட்சியில் பெரிய வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதை ஒருசிலர் உணர்ந்திருக்கின்றனர். இதில் ஒருசிலர் கட்சியில் பிளவு ஏற்பட்டு பதவிக்காக சண்டையிட்டுக் கொள்வர் என்றெல்லாம் கூறுகின்றனர். இவை அனைத்தும் அன்வார் 2015ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிறைக்குச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்டக் கருத்து வேறுபாடுகளின் தொடர்ச்சி ஆகும்.

இதற்கிடையில், பிகேஆரில் தமது தலைமையிலும் மற்றும் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையிலும் 2 தேர்தல் முகாம்கள் உருவாகி இருப்பதாக ரபிஸி கூறினார்.

எனது குழுவின் முக்கிய நோக்கம் கட்சியில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். இதில் அஸ்மின் தரப்பை எடுத்துக் கொண்டால் இதற்கு முன் சிலாங்கூரில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அவர்களின் கவனம் இருந்தது. இது அவரவரின் சொந்தக் கருத்துக்களாகும்.

இதில் அஸ்மினைப் பொறுத்தவரை சிலாங்கூரைத் தக்க வைத்துக் கொள்வதற்கே அவர் விரும்புகிறார். அது அவரது கடமை. மற்றபடி நான், சைபுடின் நசுதியோன், நூருல் இசா உட்பட மற்ற அனைவருக்கும் கட்சியின் மேல்மட்டக் கடப்பாடு இருப்பதால் நாடு முழுவதும் நாங்கள் அதைக் காக்க வேண்டும் என்று ரபிஸி மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன