அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 185,000 ஏழை குடும்பங்களுக்கு மின் கட்டணத்தில் 40 விழுக்காடு கழிவு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

185,000 ஏழை குடும்பங்களுக்கு மின் கட்டணத்தில் 40 விழுக்காடு கழிவு

புத்ராஜெயா, டிச. 26
வரும் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி மின் கட்டணத்தில் 40 விழுக்காடு கழிவுத் திட்டத்தின் கீழ் 185,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு மின் கட்டணத்தில் 40 வெள்ளி கழிவு வழங்கப்படும் என எரி சக்தி அறிவியல் தொழில் நுட்ப சுற்றுச்சூழல் வானிலை மாற்ற துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த சலுகை இடமபெற்றது.

ஈகாசே திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஏழை குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் உதவித் திட்டமாக இது அமைகிறது. வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரையில் அரசாங்கம் அறிமுகம் செய்யும் புதிய உதவித் திட்டம் இதுவாகும்.

இந்த மாதம் முடிவுக்கு வந்த வெ.20 மின்கட்டண கழிவு திட்டத்திற்கு பதிலாக இந்த புதிய கழிவுத் திட்டம் கொண்டுவரப் படுகிறது. ஏழைக் குடும்பங்கள் மாதம் வெ.40 குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்த குடும்ப தலைவருக்கு இலவசம் என குறிப்பிடப்படும் மின் கட்டண பில் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இத்திட்டத்திற்காக 8 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன