கோலாலம்பூர், ஜன 4
ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எண்ணெய் விலை குறைகிறது. நாளை சனிக்கிழமை 12.01 முதல் ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் விலை 27 காசு குறைகிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
லிட்டருக்கு 2 வெள்ளி 20 காசாக விற்கப்பட்ட ரோன் 95 பெட்ரோல் விலை 1 வெள்ளி 93 காசாக குறைகிறது. ரோன் 97 விலை லிட்டருக்கு 2 வெள்ளி 18 காசியிலிருந்து 2 வெள்ளி 04 காசாக குறைகிறது.
இந்நிலையில், டீசல் விலை 14 காசு குறைக்கப்படுகிறது. லிட்டருக்கு 2 வெள்ளி 18 காசாக விற்பட்ட டீசல் 2 வெள்ளி 04 காசாக குறைகிறது. இதனை இந்த புதிய விலை ஜனவரி 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த புதிய நடைமுறையின் கீழ் எண்ணெய் விலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படும்.


