வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் !
முதன்மைச் செய்திகள்

புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் !

கோலத் திரெங்கானு, ஜன.7-

நாட்டின் புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.  மாமன்னர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஐந்தாவது சுல்தான் முஹமட்டின் முடிவை தாம் மதிப்பதாக பிரதமர் கூறினார்.

ஐந்தாவது சுல்தான் முஹமட்டுக்குப் பதில் புதிய மாமன்னரைத் தேர்தெடுக்கும் பொறுப்பை தாம் மலாய் ஆட்சியாளர் மன்றத்திடம் விட்டு விடுவதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.  கோலத் திரெங்கானுவில் பிரிபூமி பெர்சத்து கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து  வைத்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார். அவரின் பதவி விலகல் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.

நடப்பில் இருக்கும் முறையைப் பயன்படுத்தி புதிய மாமன்னர் தேர்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து தமக்கு தெரியாது என அவர் கூறினார். எனினும் புதிய மாமன்னர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தாம் நம்புவதாக பிரதமர் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன