ஈப்போ பிப் 26-
எருமையை சுட்டுக் காயப்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் அதன் உரிமையாளர் எம்.சிவபாலன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளார் .
பத்துகாஜா தொகுதியில் உள்ள பாடாங் தெம்பாக், பண்டார் பாரு லகாட் எனும் இடத்தில் மாடுக்கொட்டகையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதில் அத்துமீறி நுழைந்த சில ஆடவர்கள் இந்தs செயலை புரிந்துள்ளனர் என்று அவர் செய்துள்ள போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான எருமை ஒன்று இரத்தக் காயங்களுடன் அந்த கொட்டகைக்குள் கிடந்ததைக் கண்டதாகவும் அதனை சோதனையில் அதன் மீது துப்பாக்கி காயம் இருந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்துள்ளது என்று போலீஸ் புகாரில் புகாரில் சிவபாலன் தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளான அந்த எருமைக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த இடத்தில் பல ஆண்டுகள் எருமைகளை வளர்த்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது இந்த விவகாரம் குறித்து பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி்.சிவகுமாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவிருக்கும் தகவலைத் தெரிவித்தார்.
இதற்கு தீர்வுக்கான விரைவு நடவடிக்கைத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார் .


