கோலாலம்பூர், பிப் 27-
இன்று புதன்கிழமை தொடங்கியிருக்கும் 249ஆவது மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு, கெடா சுல்தான் அல் அமினுல் கரிம் சுல்தான் சலேஹுடின் அல்மரும் சுல்தால் பாட்லிஷா தலைமையேற்றார்.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் அக்கூட்டத்தில், திரெங்கானு மாநிலத்தை தவிர்த்து, இதர அனைத்து மலாய் ஆட்சியாளர்களும் கலந்து கொண்டனர்.
ஜொகூர் சுல்தானா சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார், பேரா சுல்தான் நஸ்ரின் ஷா, சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா , பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் சிராஜுடின் சைட் புத்ரா ஜமாலுலைல், ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கிளந்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்து அதன் பட்டத்து இளவரசர் துங்கு டாக்டர் முகமட் பையிஸ் பெட்ரா சுல்தான் இஸ்மையில் பெட்ரா, பஹாங் மாநிலத்தைப் பிரதிநிதித்து அதன் இளவரசர் துங்கு அப்துல் ரஹ்மான் சுல்தான் அஹ்மட் ஷாவும் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டத்தில், மலாய் ஆட்சியாளர்களுடன் இணைந்து மாநில மந்திரி புசார், பினாங்கு, சபா மற்றும் மலாக்கா மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றனர்.
நாளை, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரிஹாயாட்டுடின் அல்-முஸ்தாப்பா பில்லா ஷா இப்னி சுல்தான் ஹஜி அஹ்மட் ஷா மற்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.


