ஜோகூர் மாநிலத்தின் நான்கு இளைஞர்களுக்கு சிறந்த சேவை விருது.

ஜோகூர்பாரு, ஜூலை 29-

கடந்த 27 ஆம் தேதியில் கோலாம்பூரிலுள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுக்களுக்கான மாநாடு விழாவில் ஜோகூர் ம இகா பூலாய் இளைஞர் பிரிவுத் தலைவர், ஜோகூர் மாநில இளைஞர் பிரிவின் செயலாளரும் ஜோகூர் இளைஞர் தகவல் பிரிவின் தலைவரும், சமூக நலம் மற்றும் சுற்றுச் சூழல் தலைவரருமான வீரா சாமிதுரைக்கு சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் பாகோ இளைஞர் பிரிவின் தலைவரான இரத்தன குமார் சுப்ரமணியம், முன்னாள் லாபிஸ் இளைஞர் பிரிவு தலைவரும் மற்றும் விவாசாயப்பிரிவைச் சேர்ந்த அமரன் இராமக்கிருஷ்ணன் மற்றும் தேசிய ஆலோசகர் பணிக்குழுப்பிரிவும் இளைஞர் பிரிவின் பொருளாளருமான சுந்தர ரூபன் மணிவண்ணன் அவர்களுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டன.

இந்நால்வரின் சேவைகள் ஜோகூர் மாநிலத்தில் முக்கிய பங்காற்றியது மட்டுமல்ல மிக பெரிய உறுதுணையாக இருந்தவர்களும் என்பதை மறக்கமும் மறுக்கவும் முடியாது. அவ்வகையில். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு இம்மேடை பிரதிபலித்தது.