Homeஅரசியல்தாய் மொழிப்பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்து அறிமுகம்; எல்லா இனங்களின் உணர்வுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும்...

தாய் மொழிப்பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்து அறிமுகம்; எல்லா இனங்களின் உணர்வுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும் -மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர் ஆக.6-

தமிழ், சீனப் பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆட்சேபம் தெரிவிக்கிறது என்று சங்கத் தலைவர் இராஜேந்திரன் தெரிவித்தார்.

அடுத்த கல்வியாண்டிலிருந்து நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய மொழிப்பாடத்தில் அரபு ஓவிய எழுத்தைப் பயில்வதை ஒரு பகுதியாக இணைத்துள்ள கல்வி அமைச்சின் முடிவு ஏற்புடையது அல்ல.

தமிழ், சீனப் பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தைக அறிமுகம் செய்வது குறித்து சமூகத்தில் நிலவும் ஐயப்பாடு, எதிர்மறையான கருத்துகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலம் காலமாக அரபு மொழி புனித ஆல்-குர் ஆனை கற்றுக் கொள்வதற்கான மொழியாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதனை எல்லா இன மாணவர்களுக்கும் அறிமுகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற சமூகத்தின் கருத்தாக்கத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரபு ஓவிய எழுத்தைத் தமிழ், சீனப்பள்ளிகளில் அறிமுகம் செய்து ஓவிய எழுத்தைப் போதிப்பதற்கான முயற்சி மட்டுமே எனக் கல்வி அமைச்சு கொடுத்துள்ள விளக்கம் உண்மை என்றால் தேசியப்பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தையும் தமிழ்ப்பள்ளிகளினல் தமிழ் ஓவிய எழுத்துகளையும் சீனப்பள்ளிகளில் சீன ஓவிய எழுத்துகளையும் போதிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு  ஜூன் 28 ஆம் தேதி போஸ் மலேசியா நிறுவனம் அப்துல் பாக்கி அபு பாக்கார் வரைந்த அரபு ஓவிய எழுத்து, டாக்டர் வோங் கொங் பெங் வரைந்த சீன ஓவிய  எழுத்து, டாக்டர் வேலு பெருமாள் வரைந்த தமிழ் ஓவிய எழுத்துக்களைக் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு ஓவிய எழுத்துக்குப் புதியதோர் அறிமுகத்தை உருவாக்கியது.

ஓவிய எழுத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமே அரசாங்கத்தின் நோக்கம் என்றால், தமிழிலும் சீனத்திலும் ஓவிய எழுத்துகள் உள்ளன என்பதையும் அரசாங்கம் உணர வேண்டும். இந்த இருமொழிப் பள்ளிகளிலும் சமகாலத்திலேயே சீன, தமிழ் மொழி ஓவிய எழுத்தைப் போதிக்க ஆவன செய்ய வேண்டும்.

ஓவிய எழுத்துகளை போதிப்பது வரவேற்கத்தக்க முடிவுதான் ஆனால் தேசியப்பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தையும் தமிழ்ப்பள்ளிகளின் தமிழ் ஓவிய எழுத்துக்களையும் சீனப்பள்ளிகளின் சீன ஓவிய எழுத்துகளையும் போதிக்கும் வகையில் அந்த முடிவு அமைய வேண்டும். அதன் வழி ஓவிய எழுத்தும் மொழி உரிமையும் வாழும் என்றும் எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

spot_img

latest articles

explore more