சனிக்கிழமை, டிசம்பர் 7, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இலங்கை தமிழர்களுக்கு தே.மு. அரசாங்கம் நிதியுதவியா? போலிசில் புகார் அளியுங்கள்
அரசியல்முதன்மைச் செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தே.மு. அரசாங்கம் நிதியுதவியா? போலிசில் புகார் அளியுங்கள்

பெட்டாலிங் ஜெயா, டிச.3-

தேசிய முன்னணி அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் புத்ராஜெயா தெளிவான ஆதாரங்களைப் பெறவில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கம் அத்தகைய நிதியை அளித்ததற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எந்த தரப்பினரும் போலீசில் புகார் அளிப்பதைத் தாம் வரவேற்பதாகவும் அப்போதுதான் அவ்விகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் மக்களவையில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இலங்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய முன்னணி அரசாங்கம் நிதியுதவி அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என பி.கே.ஆரின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் எழுப்பிய கேள்வி குறித்து பிரதமர் கருத்துரைத்தார்.

இதற்கு முன்பு, டி.ஏ.பியின் ஆலோசகரான லிம் கிட் சியாங், அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில், 2012ஆம் ஆண்டு இலங்கை அரசால் விரட்டப்பட்ட தமிழர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அளித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன