Homeகுற்றவியல்கோவிட் 19 : இன்று 142 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 45ஆக உயர்ந்தது! 108...

கோவிட் 19 : இன்று 142 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 45ஆக உயர்ந்தது! 108 பேர் குணமடைந்தனர்!

கோலாலம்பூர், ஏப். 1

மலேசியாவில் இன்று 142 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,908 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 102 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 66 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள்.

இன்று புதிதாக 2 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 44ஆவது மரணம் 80 வயதான மலேசிய பெண்மணி ஆவார். இவருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்த பிரச்னையும் இருந்துள்ளது. 45ஆவது மரணம் 62 வயதான மலேசியர் என சுகாதாரத் தலைமை இயக்குநர் கூறினார். இவரும் நீரிழிவு பிரச்னையை எதிர்நோக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கோவிட் நோய் தொற்றிலிருந்து பூரணக் குணமடைந்து அதிகமான பேர் வீடு திரும்பியுள்ளார்கள். இன்று மட்டும் 108 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 645ஆக அதிகரித்துள்ளது. இது 22.2 விழுக்காடு ஆகும் என நோர் ஹிசாம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more