இந்த 2 வாரங்கள் மக்கள் வீட்டினுள் இருப்பது முக்கியமானது!

0
7

புத்ராஜெயா, ஏப்.2-

நாட்டில், கோவிட்-19 நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை நேற்று தொடங்கிய இரண்டாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நிர்ணயிக்கும் என தலைமை சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஏப்ரல் 14ஆம் தேதி வரையில், அமலில் இருக்கவிருக்கும் அந்த ஆணையின் கீழ் மக்கள் வீட்டினுள் இருக்க வேண்டியது மிக முக்கியம் எனவும் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டத்தோ நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

வீட்டிலுள்ளவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் முதலானவற்றை முறையாக பின்பற்றினால், நிச்சயமாக அத்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரத்தின்படி நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிவடையும் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது. எனினும், அக்காலக்கட்டம் முடிவடைவதற்குள், தனது தரப்பு அத்தொற்றுக்கு இலக்கானவர்களின் நடப்பு நிலவரத்தை ஆய்வு செய்யும் என டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.