வியாழன் 2 ஏப்ரல்
ஜால்கி
BollyOne HD (அலைவரிசை 251), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: போமன் இரானி, தன்னிஷ்ட சாட்டர்ஜி, திவ்யா தத்தா & சஞ்ஐய் சூரி
குழந்தைத் தொழிலாளர் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றின் பின்னணியில் தனது 7 வயது சகோதரனைக் கண்டுபிடிப்பதற்காக ஜால்கி என்ற 9 வயது பெண்ணை அடிப்படையாகக் கொண்ட விருது பெற்ற நாடகத் திரைப்படம் ‘ஜால்கி’.

வியாழன் 2 ஏப்ரல்
ஓ மை கடவுளே
Astro First (அலைவரிசை 480)
நடிகர்கள்: அசோக் செல்வன், ரித்திகா சிங் & வாணி போஜன்
அர்ஜுனும் அனுவும் நீண்ட நாள் உயிர் தோழர்கள். ஒரு நாள், அர்ஜுனிடன் அனு அவன்பால் இருக்கும் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். தன் உயிர் தோழியை திருமணம் செய்தால் அஃது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று நினைத்து அனுவின் காதலை ஏற்கிறான் அர்ஜுன். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இது நேர்மாறாக மாற, இருவரும் திருமணமாகி ஒரே வருடத்துல் பரஸ்பர விவாகரத்திற்கு கோருகின்றனர்.

வியாழன் 2 ஏப்ரல்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
Astro First (அலைவரிசை 480)
நடிகர்கள்: துல்கர் சல்மான் & ரித்து வர்மா
ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளிலிருந்து பணம் சம்பாதிக்கும் சித்தார்த் மற்றும் காலிஸ், இரு இளைஞர்களைப் பற்றி சித்தரிக்கும் காதல் திரில்லர் ஹீஸ்ட் திரைப்படமானது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. அவர்களின் கனவுப் பெண்களான மீரா மற்றும் ஸ்ரேயாவைச் சந்தித்தபின் அவர்களின் வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.

வெள்ளி, 3 ஏப்ரல்
ஜடா
Thangathirai HD (அலைவரிசை 241), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: கதிர், ரோஷினி & யோகி பாபு
உள்ளூர் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வன்முறைகள் நிறைந்த 7s காற்பந்தாட்டத்தில் சேர தனது அணியை வழிநடத்தும் திறமையான காற்பந்து வீரரான ஜடா பற்றிய விளையாட்டு திகில் திரைப்படமானது ‘ஜடா’. தனது சிறுவயதில் அபிமான காற்பந்து வீரரான சேதுவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காகவே ஜடா அச்செயலில் ஈடுபடுகிறான்.

வியாழன் 9 ஏப்ரல்
செதலைட் சங்கர்
BollyOne HD (அலைவரிசை 251), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சூரஜ் பஞ்சோலி & மேகா ஆகாஷ்
திறமையான இராணுவ வீரரான சங்கர், மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது செயல்களின் நோக்கத்தை அறிந்த பொதுமக்கள், அவரது சபதத்தை நிறைவேற்ற ஒன்றுசேருகின்றனர்.

வியாழன் 9 ஏப்ரல்
மாஃபியா: அத்தியாயம் 1
Astro First (அலைவரிசை 480)
நடிகர்கள்: அருண் விஜய், பிரசன்னா & பிரியா பவானி ஷங்கர்
ஒரு போதைப்பொருள் துடைத்தொழிப்பு அதிகாரியான, ஆரியனைப் பற்றிய ஒரு அதிரடி திரைப்படம் ‘மாஃபியா: அத்தியாயம் 1’. அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் கைதுகளைக் கொண்ட தனது நகரத்தைப் போதைப்பொருள் அற்ற நகரமாக மாற்ற அவர் போராடுகிறார். ஆரியனுக்கு நெருக்கமானவர்கள் கொலை செய்யப்படும்போது அவரது முயற்சிகளில் தடை ஏற்ப்படுகின்றன. போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி பற்றி ஆரியன் கண்டுபிடிக்க அவனை வேட்டையாட உறுதி கொள்கிறார்.

வெள்ளி, 10 ஏப்ரல்
வானம் கொட்டட்டும்
Thangathirai HD (அலைவரிசை 241), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சரத்குமார், விக்ரம் பிரபு & ராதிகா சரத்குமார்
ஒரு தந்தையான போஸ் காலை, நீண்ட காலத்திற்கு பிறகு தன் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைகிறார். ஆனால், கடந்த காலத்தில் அவர் செய்த ஒரு தவறு அவர் தன் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்ல வழிவகுக்க அத்தவறு போஸ் காலையின் நிம்மதியை சீர்குழைக்கின்றது.