Homeகுற்றவியல்கோவிட் 19 : இன்று 150 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 57ஆக உயர்ந்தது! 88...

கோவிட் 19 : இன்று 150 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 57ஆக உயர்ந்தது! 88 பேர் குணமடைந்தனர்!

கோலாலம்பூர், ஏப். 3-

மலேசியாவில் இன்று 150 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,483 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 99 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள்.

இன்று புதிதாக 4 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. இன்று 88 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது.

spot_img

latest articles

explore more