பெந்தோங், ஏப் 7-

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பகாங் பெந்தோங் மாவட்ட போலீஸ் துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்படிருந்த 30 வயது ஆடவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

பெந்தோங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையின் மூலம் அந்த ஆடவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பெந்தோங் மாவட்டக் காவல்துறை தலைவர் சுப்ரிடெண்டண்ட் யூசோஃப் யூனிஸ் தெரிவித்தார்.

உடற்கூறு சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்படன் அவரின் திடீர் மரணத்திற்கானக் காரணம் தெரியவில்லை என அவர் கூறினார்.