கோலாலம்பூர், ஏப். 10-

நாட்டில் மீன் விநியோகம் போதுமானதாகவும் தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் மீன், கடல்சார் உணவுகள் 185 ஆயிரம் டன் வநியோகிக்கப்படுகிறது என விவசாயம், உணவுத் தொழில் அமைச்சர் டத்தோ சே அப்துல்லா அகமாட் நாவி தெரிவித்தார்.

நடப்பு சூழலில் நாட்டில் உணவுப் பொருள் விநியோகம் நீடித்திருப்பதை உறுதி செய்ய விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் தங்களின் உற்பத்தியை அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதோடு அவற்றை விநியோகம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதால் அதில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை என்றார் அவர்.

கடல்சார் உணவு வகைகளை வாங்கும் பயனீட்டாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் 36 மீனவர் சங்கங்கள் அவற்றை நேரடியாக விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.