கோலாலம்பூர், செப்.14-

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக டத்தோ ஆர்.ராமநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேளையில், துணைத் தலைவர்,உதவி தலைவர் மற்றும் 14 நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் இங்குள்ள ராயல் சிலாங்கூர் கிளப்பில் சுமூகமாக நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் பசுபதி செயல்பட்ட இத்தேர்தலில் துணைத் தலைவராக தமிழ்ச் செல்வன் சுப்ரமணியம் @ டி.செல்வம் 149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்த ஈராண்டுக்கான இத்தேர்தலில் சங்கத்தின் உதவி தலைவராக நவமணி ராமச்சந்திரன் 146 வாக்குகளுடன் வாகை சூடினார்.

பொருளாளர் பதவிக்கு போட்டி நிலவாததையடுத்து குமரகுரு முனியாண்டி தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களாக நிவாஸ் ராகவன் (246 வாக்குகள்), கமால் குமார் கிஷோர் சந்திரா (226 வாக்குகள்), குமரேசன் சண்முகநாதன் (213 வாக்குகள்), ஜனனி கணேசன் (193 வாக்குகள்), மோகனா சின்னத்தம்பி (192 வாக்குகள்), டாக்டர் சிவஜோதி சுப்பையா (189 வாக்குகள்), பாவ்சியா பீபீ அப்துல் அஜிஸ் (183 வாக்குகள்), ரவிச்சந்திரன் நடராஜன் (180 வாக்குகள்), டோனி கிளிபோர்ட் ( 175 வாக்குகள்), செல்வராஜ் ஆசீர்வாதம் (170 வாக்குகள்), டத்தோ சந்திரசேகரன் (160), ராமன் நல்லசாமி (157 வாக்குகள்) , ஜெயகமால் பாலுராஜ் (155 வாக்குகள்) மற்றும் சுந்தரமூர்த்தி சுரேஷ் (147) ஆகியோர் வெற்றி பெற்றனர்.